தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
கருத்தரங்கில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், தாய்ப்பாலின் மகத்துவம் அதன் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த கருத்தரங்கிற்கு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட இயக்குநர் அமுதவல்லி , மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.