தூத்துக்குடி பாஜக அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நிர்வாகிகளுக்கு கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டார்கள். இதில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நிர்வாகிகளுக்கு கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கபட்டது. மேலும் மாற்று கட்சியில் இருந்து வந்த பலர் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து கொண்டார் .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட, மாநில, அணி பிரிவு நிர்வாகிகள், மண்டல தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.