• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நடிகர் தனுஷ் பிறந்த நாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு அசைவ விருந்துடன் அன்னதானம் கொடுத்து அசத்தல்!

  • Share on

தூத்துக்குடியில் நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு,  மாவட்ட தனுஷ் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு அசைவ விருந்துடன் அன்னதானம் கொடுத்து அமர்களமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுசின் 39 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்ட தனுஷ்  தலைமை ரசிகர் மன்றம் சார்பில், மாவட்ட தலைவர் மணி கண்டன் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தினர்,  தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு அசைவ விருந்துடன் அன்னதானம் கொடுத்து அமர்களமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், ஏழைகள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கும் உணவுகள் வழங்கினர்.

இதில்,  மாவட்ட பொருளாளர் சூர்யா காந்த், வழக்கறிஞர் தொல் காப்பியன்,  மாநகர தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட தனுஷ்  தலைமை ரசிகர் மன்றம் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை

தூத்துக்குடியில் திருடுபோன ரூ.43 லட்சம் மதிப்புள்ள லாரி மீட்பு : டிரான்ஸ்போர்ட் சூப்பர்வைசர் மீது வழக்கு!

  • Share on