தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முனியசாமி கோவில் கொடை விழாவை யொட்டி நேற்று காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக பஜனையுடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 5 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் கொடைவிழாவை யொட்டி மகளிர் அணி சார்பில் நடைபெற்ற திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மகளிர் அணியினர் செய்திருந்தனர்.