• vilasalnews@gmail.com

ஆஷ்துரை நினைவிடம் புதுபிக்கும் பணி... மாநகராட்சி கூட்டத்தில் மேயர் திட்டவட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் ஆஷ்துரை நினைவிடம் புதுபிக்கும் பணி தொடர்பாக, மாநகராட்சி மீது அவதூறு பரப்பும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தில் ஆஷ்துரை நினைவிடத்தை தூத்துக்குடி மாநகராட்சி பல லட்சம் செலவு செய்து புதுப்பித்து வருகிறது. பாஜக, இந்து அமைப்பினர் உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி :-

தூத்துக்குடியில் ஆஷ்துரை நினைவிடம் 1911 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, தற்போது நூறு ஆண்டுகளை கடந்துள்ளதால், மாநகராட்சிப் பகுதியிலுள்ள தொன்மையான கட்டடங்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்கக்கூடிய நினைவு சின்னங்கள் வகையில், ஆஷ்துரை நினைவிடம் தற்போது ஸ்மாட்டி சிட்டி திட்டத்தில் புதுபிக்கப்பட்டு வருகிறது.

ஆஷ்துரை நினைவிடம், கடந்த 2019 ம் ஆண்டே, மாநகராட்சி ஆணையர், தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், தன்னார்வு சமூக அமைப்புகள் உள்ளிட்டோர் அடங்கிய ஸ்மாட்டி சிட்டி திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை குழு மூலம் தேர்வு செய்யப்பட்டவை. மேலும், ஆஷ்துரை நினைவிடத்தை ஆண்டுக்கு ஒரு முறை பராமரிக்கும் பணியையும் மாநகராட்சி செய்து கொண்டு தான் வருகிறது. இதை தற்போது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக, ஆஷ்துரை நினைவிடம் புதுப்பிக்கும் பணி தொடர்பாக, எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்து வருகின்றனர்.

எனவே, ஆஷ்துரை நினைவிடம் புதுபிக்கும் பணி தொடர்பாக மாநகராட்சி மீது அவதூறு பரப்பும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

  • Share on

திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்காக தூத்துக்குடியில் ஓய்வறை பூங்கா : மேயர் அறிவிப்பு

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை

  • Share on