• vilasalnews@gmail.com

மங்களக்குறிச்சி, மாப்பிள்ளையூரணி குடிநீர் திட்டப்பணிகள்: ஆட்சியர், எம்எல்ஏ ஆய்வு

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மங்களக்குறிச்சி ஊராட்சி மற்றும் தூத்துக்குடி வட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரியம், மூலம் மங்களக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் 43&45 கூட்டுக் குடிநீர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா  மங்களகுறிச்சி நீரேற்று நிலையம் மற்றம் தாமிரபரணி ஆற்றுப்படுகை குரங்கணிக்கு அருகில் அமைநதுள்ள ஏழு எண்ணிக்கையிலான நீர்உறிஞ்சும் கிணற்றினை ஆய்வு செய்தனர்.

இத்திட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றித்தில் குரங்கணி அருகில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஏழு எண்ணிக்கை கொண்ட நீர் உறிஞசும் கிணறுகள் அமைக்கப்பட்டு 5 எச்பி மேட்டார் மூலம் நீரேற்று நிலையம் மங்களக்குறிச்சியில் 2 லட்சம் கொள்ளளவு கொண்டுள்ள தரைமட்ட தொட்டியில் நீர் சேகரிக்கப்படுகிறது. பின்னர் 30 எச்பி மேட்டார் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு பிராதான குழாய் மூலம் 37.50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாப்பிளையூரணி ஊராட்சியில் உள்ள 1 லட்சம் லிட்டர் மற்றும்    2.25 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. 

மாப்பிளையூரணி ஊராட்சியில் 36 எண்ணிக்கை மேல்நிலைநீர்தேக்கத் தொட்டியில் (12 இலட்சம் லிட்டர்) மோட்டார் மூலம் இயக்கப்பட்டு பகிர்மான குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பின்னர் மாப்பிளையூரணி ஊராட்சிக்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய நிதியின் மூலம் கோரம்பள்ளம் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் கிணற்றினை ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் , மாப்பிளையூரணி ஊராட்சிக்கு குடிநீர் பிரச்சினைகளை சரி செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை திட்ட மதிப்பீடு தயார் செய்து வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாகப் பொறியாளர் செந்தூர்பாண்டி, மாப்பிளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணக்குமார், உதவி நிர்வாகப் பொறியாளர் ராஜா, உதவிப் பொறியாளர் மகேஷ்குமார், ஊராட்சி துறை உதவி இயக்குநர் உலகநாதன், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், ஊராட்சி நாகராஜ், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

ஆடி அமாவாசை... தூத்துக்குடி கடற்கரையில் குவிந்த மக்கள்!

  • Share on