ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கண்ணன் (30) என்பவர் நேற்று (26.07.2022) காயல்பட்டினம் தைக்காபுரம் பகுதி அருகே நின்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற அதே பகுதியை சேர்ந்த தங்கம் மகன் செந்தில்வேல் (20) என்பவரை வாகனத்தில் வேகமாக சென்றதற்காக கண்ணன் சத்தம் போட்டு உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மேற்படி செந்தில்வேல் கண்ணனிடம் தகராறு செய்து அவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு குமார் வழக்குபதிவு செய்து மேற்படி செந்தில்வேலை கைது செய்தார்.