• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 21 ஆட்டோக்கள் பறிமுதல்!

  • Share on

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த 21 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின்படி, தூத்துக்குடி பகுதிகளில் இயங்கும் ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஏற்றி செல்வது குறித்து 4 குழுக்களாக சிறப்பு சோதனை செய்யப்பட்டது. அதனடிப்படையில் இன்று (27.07.2022) காலை 7.45 மணி முதல் வட்டாரப் போக்குவத்து அலுவலர் எஸ்.விநாயகம், மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் கூட்டாக சுப்பையா வித்யாலாயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கோலிகிராஸ் பள்ளி அருகில்  சிறப்பு சோதனை செய்யப்பட்டது. 

சோதனையின் போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பள்ளி குழந்தைகள் ஏற்றி வந்த 21 எண்ணிக்கையிலான ஆட்டோக்களை வாகனங்களை தணிக்கை செய்து, தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் சிறைப்பிடித்து நிறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி  நேரடியாக சம்பந்தப்ட்ட ஆட்டோ வாகன ஓட்டுநர்களை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்ல கூடாது என எச்சரித்து வாகனங்களை விடுவித்தார். 

மேலும், மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி  பள்ளி குழந்தைகளை ஆட்டோ  வாகனங்கள் மூலம் பள்ளி அனுப்பும் பெற்றோர்கள் ஒரே வாகனத்தில் அதிக அளவில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.

ஆட்டோ  வாகனங்களில் அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்வது குறித்து இனிவருங்காலங்களில் இதுபோன்று தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ்.விநாயகம்  தெரிவித்தார்

  • Share on

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் - அமைச்சர், மேயர் வழங்கினர்!

பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்டவருக்கு பீர் பாட்டிலால் தாக்குல்!

  • Share on