தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனபாண்டி மகன் செல்வகணேஷ் (22). இவர் இன்று (25.07.2022) தனது TN05 BJ 9013 KTM Rc 200 எனும் இருசக்கர வாகனத்தை தனது வீட்டு வாசல் முன்பு நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடி டி.எம்.பி காலனியைச் சேர்ந்தவர்களான மாரியப்பன் மகன் மாடசாமி (26), மாடசாமி மகன் சுப்புராஜ் (23) மற்றும் தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த கணேசன் மகன் சுப்புராஜ் (21) ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக மேற்படி செல்வகணேசனின் இருசக்கர வாகனத்தின் டேங்க் கவரை அரிவாளால் வெட்டியும், பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வாகனத்தின் அடிப்பக்கத்தில் தீ பற்ற வைத்து எறித்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து செல்வகணேஷ் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து மாடசாமி, சுப்புராஜ் மற்றும் மற்றொரு சுப்புராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தார்.
மேற்படி மாடசாமி மீது ஏற்கனவே சிப்காட், தென்பாகம் மற்றும் தெர்மல்நகர் ஆகிய காவல்நிலையங்களில் மொத்தம் 3 வழக்குகளும், சுப்புராஜ் மீது மத்தியபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.