• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் திடீர் மழை!

  • Share on

தூத்துக்குடியில் இன்று திடீரென்று மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த காற்று வீசி வந்தது. அவ்வப்போது லேசான மேகமூட்டமும் காணப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி எடுத்தது. இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்பட்டனர். மாலையில் மேகங்கள் திரண்டு வந்தன.

தூத்துக்குடியில் சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரத்தில் நின்று விட்டது. பின்னர் இரவு 8.45 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. அப்போது பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கின.

வெப்பத்தால் இரவில் ஏற்படும் புழுக்கத்தில் அவதிப்பட்ட மக்களுக்கு, திடீர் மழையால் குளிர்ந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

  • Share on

பயிர் காப்பீடு வழங்க கோரி புளியங்குளம், பூசனூர் கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!

தூத்துக்குடியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை தீயிட்டு சேதப்படுத்திய 3 பேர் கைது!

  • Share on