மிளகாய், கம்பு, சோளம் பயிருக்கான பயிர் காப்பீட்டை உடனடியாக வழங்க கோரி புளியங்குளம், பூசனூர் கிராம விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
ஒவ்வொரு வருடமும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இயற்கை சீற்றங்களாலும் மழை வெள்ளத்தாலும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற்றிட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முன்வர வேண்டும் அழைப்பு விடுக்கிறது.
ஆனால் 2020-2021 ஆண்டு பெய்த காலம் தவறிய மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக பயிர்கள் முழுவதும் சேதமடைந்து விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்
அப்போது விளாத்திகுளம் பகுதிக்கு வந்து சென்ற அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் பயிர் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்
ஆனால் தற்போது வரை மிளகாய் கம்பு சோளம் பயிருக்கான காப்பீடு தொகையும் அரசு அறிவித்த நிவாரண தொகையும் விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. எனவே 2020-2021 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். என அதில் கூறப்பட்டிருந்தது.