தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி இணைந்து நடத்தும் தூத்துக்குடி மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பணியிடைப் பயிற்சி 25.07.2022 மற்றும் 26.07.2022 ஆகிய இரண்டு நாள்கள் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில், கல்லூரியின் செயலர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பால ஷண்முக தேவி தலைமையுரை வழங்கினார். முதுகலை மற்றும் வேதியியல் ஆராய்ச்சித்துறைத் தலைவர் மற்றும் பணியிடைப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோகிலா சுபத்ரா கிறிஸ்டி வரவேற்புரை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர், பொறுப்பாளர் தமிழ்செல்வி வாழ்த்துரை வழங்கினார். தூத்துக்குடி உதவி திட்ட அலுவலர் பெர்சியாள் ஞானமணி சிறப்புரை வழங்கினார்.
பயிற்சியின் இறுதியில், முதுகலை மற்றும் வேதியியல் ஆராய்ச்சித் துறைத் துணைத்தலைவர் முனைவர் சண்முகப் பிரியா நன்றியுரையாற்றினார்.
இதில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியப் பயிற்றுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை முதுகலை மற்றும் வேதியியல் ஆராய்ச்சித்துறையின் அனைத்துப் பேராசிரியர்களும் இணைந்து செய்திருந்தனர்.