• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரத்தில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

  • Share on

ஓட்டப்பிடாரத்தில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

ஓட்டப்பிடாரம் வடக்குபரும்பூரை சேர்ந்த பேச்சிமுத்து மகன் கோபாலகிருஷ்ணன். வேன் டிரைவர். இவரது 2-வது மகன் கொம்பையா (வயது 15). இவர் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று காலையில் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது தாயார் தூத்துக்குடி சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது கொம்பையா வீட்டின் பேன் மாட்டும் கம்பியில் சேலையால் தூக்கு மாட்டி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

அவரை மீட்டு, ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

எட்டையபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியர் வெட்டிக் கொலை!

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பணியிடைப்பயிற்சி - ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்தது!

  • Share on