• vilasalnews@gmail.com

ஆஷ் துரை மணி மண்டபம் சீரமைப்பு...கும்பி கூலுக்கு அழுது , கொண்டை பூவுக்கு அழுது...இந்து முன்னணி காட்டம்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்ப்பட்ட பகுதியில் உள்ள ஆஷ் துரை மணி மண்டபம் சீரமைப்பு பணி நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள், வீடற்ற ஏழை, எளியவர்கள் தங்குவதற்கான கட்டிடங்கள், போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடமில்லை. அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தும் கிராம நிர்வாக அலுவலகங்கள் பல கட்டிடங்கள் உடைந்து நொருங்கிய நிலையில் உள்ளன. அந்த கட்டிடங்களை கூட சரியாக புணரமைக்கப்படாமல் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தூத்துக்குடி மாநகராட்சிகுட்பட்ட பகுதியான பீச்ரோடு, சார் ஆட்சியர் அலுவலகத்தின் வடபுறம் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர்களையும் , இந்திய சுதந்திரத்திற்காகப் செம்மல் வ.உ.சிதம்பரனார் , வாஞ்சிநாதன் பாடுபட்ட செக்கிழுத்த அவர்களையும் , கொடுமைப்படுத்திய ஆஷ்துரைக்கு மணிமண்டபத்தை புதுப்பித்துக் கட்டுவது என்பது இந்த நாட்டுக்கு சுதந்திரத்தை வாங்கி தந்த தியாகிகளுக்கு துரோகம் செய்த செயலாகும் . கும்பி கூலுக்கு அழுது , கொண்டை பூவுக்கு அழுது என்ற பழமொழிக்கு தகுந்தாற்போல் ஆஷ்துரையின் மணிமண்டபம் கட்டுவதற்கு செலவிடப்படுவது இந்த ஆட்சிக்கு மக்கள் வாக்களித்ததற்கு இழைக்கும் துரோகமாகும்

பசி என்று இருக்கும் பொழுது தலைக்கு பூ வைத்து பார்த்தால் ஒருவருடைய முகம் மலராது. எத்தனையோ முக்கியமான சீரமைப்பு கட்டிடங்கள் இருக்கும் பொழுது ஆங்கிலேயர் ஆட்சிக்கு சாதகமாக செயல்பட்ட ஆஷ்துரைக்கு மணிமண்டபம் புரணமைப்பது கற்றறிந்த அதிகாரிகளின் கண்களைத் தங்க ஊசியின் மூலம் குத்துவது போன்றதாகும்.

ஆஷ்துரைக்கு மணிமண்டபம் புதுப்பிப்பதை நிறுத்தி வரலாறு பற்றி பொதுமக்களுக்கு, பள்ளி குழந்தைகளுக்கு சுதந்திர புத்தகங்களை வைப்பதற்கு நூலகம் அமைக்கப்படலாம் விடற்ற ஏழை , எளியவர்களுக்கு தங்குவதற்கு கூடாரமாக மாற்றலாம் . 

ஆஷ்துரை மணிமண்டபம் என்று பெயர் வைப்பதை விட ஆஷ்துரையை வீரத்தில் ஆங்கிலேயருக்கு சாதகமாக சுட்டுக்கொண்ட வீரத்தலைவர் வாஞ்சிநான் பெயரை குறிப்பிட்டு மணிமண்டபம் கட்டப்பட்டால் இந்திய வரலாறுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும் . 

அவ்வாறு இல்லாத பட்சத்தில் சென்னை, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஷ்துரையின் மணிமண்டபம் என்று பெயரிட்டு புணரமைக்கப்படுவதைத் தடுப்பதற்கும், பொதநல வழக்கு தொடுப்பதற்கும் முயற்சி செய்யப்படும் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

ஆங்கிலேயரை எதிர்த்து கப்பலோட்டிய தமிழனுடைய வ.உ.சிதம்பரனாரின் சிலை அமைத்தால் இந்த தூத்துக்குடி மக்களுக்கு இந்த அரசு செய்த பெரிய நன்மையாகும். என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  • Share on

விவசாயிகளின் நிலத்தை தனி நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

எட்டையபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியர் வெட்டிக் கொலை!

  • Share on