தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து ஆட்டோ தொழிலாளர் முண்ணனியினர் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது ஆதார், ரேஷன் கார்டை திரும்ப ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகரின் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க ஆட்டோ ஸ்டாண்ட் போர்டு நிறுவதற்கு அனுமதி மறுத்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயகுமார் தலைமை வகித்தார். இந்து ஆட்டோ முன்னணி மாநில துணை பொது செயலாளர் சக்திவேல், மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாரியப்பன், சுப்புராயலு, மாவட்ட துணை தலைவர் மணிவண்ணன் மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சக்திவேல், கதிரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.