தூத்துக்குடியில் நடைபெற்ற கராத்தே சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு கராத்தே கருப்பு பட்டயம் வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.
சோபுகாய் கோஜிரியு கராத்தே டு இந்தியா சார்பாக தூத்துக்குடி என்.டி.பி.எல் காலனியில் நேற்று 24.07.2022 கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடியைச் சேரந்த 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி மீரா என்பவர் கராத்தே கருப்பு பட்டயத்தை வென்றார்.
மேற்படி கருப்பு பட்டயத்தை வென்ற மாணவி மற்றும் கராத்தே ஆசிரியர் முத்துராஜா ஆகியோர் இன்று (25.07.2022) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.