மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் இன்று தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் , கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும், சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு , அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு ஆகியவற்றை கண்டித்து அதிமுகவினர் அரிக்கேன் விளக்கினை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநில எம்ஜிஆர்.இளைஞரணி துணைச் செயலாளர் சீனிராஜ், அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத்துரைப்பாண்டியன், மகேஸ், அன்புராஜ், கோவில்பட்டி ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், வடக்கு மாவட்ட வழக்கறிஞரணிச் செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் சங்கர் கணேஷ்,ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளர் வேலுமணி, நகரச் செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை,
எட்டயபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், அவைத்தலைவர் அப்பாச்சாமி, கழகப் பேச்சாளர் பெருமாள்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மாவட்ட பிரதிநிதிகள் மகேஷ்பாலா, முத்துலட்சுமி, வழக்கறிஞர் சங்க சங்கர்கணேஷ், மாவட்ட மாணவர் அணி துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சுதா, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமிராஜ், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தேவேந்திரன், பாலமுருகன், பழனிக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.