தாளமுத்துநகரில் உள்ள மதுகடைகள் அகற்ற கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் ஸ்டார் மெடிக்கல் அருகில் ஒரு கடையும் (கடை எண் 9972) டாடா இன்டிகோ ATM அருகில் ஒரு கடையும் (கடை எண் 9954) இயங்கி வருகிறது. இந்த இரு கடைகளும் 100 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளது. இரு கடைகளும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளதால் அதில் மது அருந்தும் மது பிரியர்கள் மது பாடில்களை ரோட்டிலும் அருகில் உள்ள தெருக்களிலும் வீசி செல்கின்றார்கள். மதுபாட்டில்கள் நொருங்கி பொது மக்களுக்கு சேதம் விளைவிப்பதாக உள்ளது.
மேலும் மது பிரியர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மிகவும் ஆபாசமாக படுத்திருப்பதால் அந்த வழியாக செல்லும் குழந்தைகள், பெண்கள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் .
எனவே, இந்த இரண்டு கடைகளையும் மூடி அப்புறப்படுத்துமாறு தாளமுத்துநகர் மற்றும் சமீர்வியாஸ்நகர் பொதுமக்கள் சார்பாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாகவும் பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.