தூத்துக்குடி என்.டி.பி.எல் காலனியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டயத்தேர்வு நடைபெற்றது.
இம்முகாமில் கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் சோபுக்காய் கோஜுரியு மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் பயிற்சி அளித்தார்.
இம்முகாவில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் என்.டி.பி.எல் தலைமை நிர்வாக அதிகாரி கொண்டாஸ் குமார் தலைமை தாங்கினார். பொது மேலாளர்கள் காமராஜ், ஜெயச்சந்திரன் மற்றும் என்.டி.பி.எல் நிர்வாகிகள் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பட்டயத்தை வழங்கி பாராட்டினார்கள்.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சோபுக்காய் கோஜு ரியு, சென்சாய் செந்தில், சென்சாய் முத்துராஜா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் மூத்த பயிற்சியாளர்கள் கார்த்தி, பாக்கியராஜ் , கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.