தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் தெற்கு ஒன்றியம் செயற்குழு கூட்டம் வேம்பார் பாஜக அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு பாஜக ஒன்றிய தலைவர் பார்த்திபன் தலைமை வைத்தார். சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட செயலாளர் ஆத்திராஜ் மற்றும் லிங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு பார்வையாளராக பால்ராஜ் கலந்து கொண்டார். ஒன்றிய பொது செயலாளர் குருசாமி வரவேற்புரையாற்றினார். லிங்கராஜ் நன்றியுரையாற்றினார்.
பொருளாளர் சுயம்பு, மீனவர் அணி மாவட்ட தலைவர் துறை, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் புவனேஸ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜான் பிரிட்டோ கென்னடி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் அணி, பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்