• vilasalnews@gmail.com

ஆறுமுகநேரியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது!

  • Share on

ஆறுமுகநேரி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் தலைமையில் உதவி ஆய்வாளர் அமலோற்பவம் மற்றும் போலீசார் நேற்று (23.07.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகநேரி பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஆறுமுகநேரி மார்க்கெட் பகுதியை சேர்ந்த வேல்சாமி மகன் சூர்யா (20) என்பதும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனடியாக மேற்படி போலீசார்  சூர்யாவை கைது செய்து அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட சூர்யா மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடதக்கது.

  • Share on

தூத்துக்குடியில் பாஞ்சாலங்குறிச்சி ஓர் அறிமுகம் புத்தக வெளியீட்டு விழா ஆலோசனை கூட்டம்!

விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம்!

  • Share on