• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பாஞ்சாலங்குறிச்சி ஓர் அறிமுகம் புத்தக வெளியீட்டு விழா ஆலோசனை கூட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் பாஞ்சாலங்குறிச்சி ஓர் அறிமுகம் புத்தக வெளியீட்டு விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

"பாஞ்சாலங்குறிச்சி ஓர் அறிமுகம் " "ஆங்கிலேய ஆவணங்களில் கண்டெடுக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சியின் வரலாற்றுச் சுவடுகள்" என்ற புத்தக வெளீயீட்டு விழா சம்மந்தமாக தூத்துக்குடியில், இன்று தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வரதராஜன்  தலைமையில், கௌரவ தலைவர் சங்கரவேலு, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், புத்தகத்தின் சிறப்புக்களையும், கட்டபொம்மன் வரலாறையும் விளக்கிப் பேசப்பட்டது. பின்னர்  புத்தக வெளியீட்டு விழா நிதியாக, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன் தன்னுடைய நிதியாக 50,000  ரூபாய் நன்கொடை வழங்கினார். 

இந்த கூட்டத்தில், பாஞ்சை போர்முழக்கம் ஆசிரியர் செந்தில்குமார், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில அமைப்பு செயலாளர் அழகர் சாமி, மாநில துணைத்தலைவர் சுப்புராஜ், விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் குருசாமி, கொள்கை பரப்பு செயலாளர் விடி ராமலிங்கம் , மாநிலதுணைத் தலைவர் மல்லுச்சாமி, வீரபாண்டிய கட்டபொம்மன் தொண்டர் படை தலைவர் விநாயகம், முத்தையாபுரம் முருகன், செந்தில், ஸ்ரீ மூலக்கரை சரவணன், வீரபாண்டிய கட்டபொம்மன் தேசிய கழக நிர்வாகிகள் நடராஜன், ஜெயராமன், சிவக்குமார், மற்றும் அருண் நேரு, பழனி வேல், இசக்கி செல்வம், கார்த்திக், அழகு ராஜ், முருகன், எல்லப்பன், பொம்முசாமி, வீர சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர் வாரும் பணி - கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்!

ஆறுமுகநேரியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது!

  • Share on