• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் செயின் பறிப்பு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் செயின் பறிப்பு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் இன்று  குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 21.06.2022 அன்று மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மணிநகர் பகுதியில் வைத்து ஓட்டப்பிடாரம், கவர்னகிரி பகுதியை சேர்ந்த தமிழழகன் மகன் காசிராஜன் (36) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில், மேற்படி காசிராஜனின் தந்தை தமிழழகன் (56), அவரது சகோதரரான தூத்துக்குடி கரிகாலம் காலனியை சேர்ந்த கடல்ராஜா (45), இவரது மகன் அரவிந்த் (19) மற்றும் தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு, ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் காசித்துரை (31) ஆகிய 4 பேரையும் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் தமிழழகன், கடல்ராஜா மற்றும் அரவிந்த் ஆகியோர் கடந்த 20.02.2022 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலைடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இவ்வழக்கின் மற்றொரு நபரான காசித்துரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் அவர்களும்,

கடந்த 28.06.2022 அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்கோட்டை to சாயர்புரம் தேரி சாலையில், சாயர்புரம் புளியநகரை சேர்ந்த சரவணக்குமார் மனைவி ரேவதி (30) என்பவர் அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரிடம் இரு சக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஏரல் சிவகளை பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் அய்யப்பன் (25) என்பவரை சாயர்புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் அய்யப்பன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு, ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் 1) காசித்துரை மற்றும் ஏரல் சிவகளை பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் 2) அய்யப்பன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 2 பேரையும் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 34 பேர் உட்பட 145 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

  • Share on

தாளமுத்துநகர் நகர் குடோனில் கணவாய் மீன் ஓடுகளை திருடியவர் கைது!

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர் வாரும் பணி - கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்!

  • Share on