• vilasalnews@gmail.com

தாளமுத்துநகர் நகர் குடோனில் கணவாய் மீன் ஓடுகளை திருடியவர் கைது!

  • Share on

தூத்துக்குடி சிலுவைபட்டி பெரியசெல்வம் நகரைச் சேர்ந்த அருள்மணி மகன் ஸ்டீபன் எட்வர்ட் மணி (49) என்பவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளமுத்துநகர் கிழக்கு காமராஜர் நகரில் உள்ள குடோனில் இருந்து கடந்த சில மாதங்களாக கணவாய் மீன் ஓடுகள் திருடு போயுள்ளது.

இதுகுறித்து ஸ்டீபன் எட்வர்ட் மணி அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த அம்பிராஜ் மகன் அஜித்குமார் (26) என்பவர் மேற்படி ஸ்டீபன் எட்வர்ட் மணி என்பவரது குடோனிலிருந்து ரூபாய் 32,000 மதிப்புள்ள 8 மூடை கணவாய் மீன் ஓடுகளை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா வழக்குபதிவு செய்து  அஜித்குமாரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

கோவில்பட்டியில் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.கவினர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் செயின் பறிப்பு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

  • Share on