கோவில்பட்டியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் அதிகமாக நடைபெற்று வருவதாகவும், அந்த முறைகேடுகளை கண்டித்து பாஜகவினர் அக்கட்சி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் சார்பதிவாளர் அலுவலகத்தினை முற்றுகையிட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.