• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் லைசென்ஸ் இல்லாத ஒயின்ஷாப் பார்கள் இயங்குகிறதா?

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இவ்வாறு செயல்பட்டு வரும் மதுப்பானக் கடைகளுக்கு எவ்வித இணைப்பு பார் வசதி உரிமைகள் முறையாக டெண்டர் மூலம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முந்தைய ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட மதுபான பார்கள் இயங்கிட அரசுக்கு சுமார் ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வருவாய் ஈட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளின் இணைப்பு பார்கள் முறையாக டெண்டர் உரிமங்கள் பெறாமல் முறைகேடாக இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் முறைகேடாக செயல்பட்டு வரும் பார் உரிமையாளர்களிடம் கேட்டப்போது " நாங்கள் முறையாக டெண்டர் மூலம் அனுமதி பெற்று பார்களை நடத்துவதாக இருந்தால் அரசுக்கு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டி வரும் இந்த நிலையில் தற்போது ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் 40% சதவீதம் கமிஷன் வழங்கிட்டு வர்றோம் தம்பி, அதனால் எந்த பிரச்சனை வந்தாலும் அவங்க பார்த்துப்பாங்க " என்றார்.

மேலும் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் தூத்துக்குடி மாவட்ட மதுப்பான விற்பனை மேலாளர் (தமிழ் கடவுள் பெயர் கொண்ட)  முன்னாள் டிஐஜி மருமகன் என்பதும் இவரின் ஒட்டுமொத்த துணையோடு தூத்துக்குடி மாநகர திமுக பொறுப்பாளர் உள்ளிட்ட இருவரின் கூட்டு கமிஷனில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 50 மதுபானக் கடைகளின் இணைப்பு பார்கள் எவ்வித டெண்டர் அனுமதியோ, அரசு பார் வசதி அனுமதியோ பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. மேலும் இது தொடர்பான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட கலால் அதிகாரி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட அமைச்சர் உள்ளிட்டோர் சட்டவிரோத மதுபான பார் செயல்பாடுகளின் நிலைகளை அறிந்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கமால் மௌனமாக இருந்து வருகின்றனர்.

அனுமதியற்ற வகையில் இயங்கி வரும் பார்கள் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் கோரிக்கை வைத்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பகுதி கழக நிர்வாகிகள் தேர்தலுக்கான மனுக்கள் வினியோகம் தேர்தல்

கோவில்பட்டியில் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.கவினர் கைது

  • Share on