தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பகுதி கழக நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல் பார்வையாளர் குழந்தைவேலு வழங்கினார்.
தி.மு.க.வின் 15-வது பொதுத் தேர்தல் பல்வேறு கட்டமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பகுதி கழக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வேட்பு மனுக்கள் வினியோகம் ன்று தொடங்கியது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.வில் உள்ள பகுதி செயலாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புகிறவர்களுக்கான வேட்பு மனு வினியோகம் தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயரும், பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் பார்வையாளரும், தலைமை தணிக்கை குழு உறுப்பினருமான பெ.குழந்தைவேலு வேட்பு மனுக்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து போட்டியிட விரும்புகிறவர்கள் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, விண்ணப்பங்களை பூர்த்தி செய்துஒவ்வொரு பொறுப்புக்கும் ரூ.1000 கட்டணம் செலுத்தி வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.