• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடியில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (22ம் தேதி) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, விபத்து ஏற்படாமல் இருக்க வேண்டி கீழ்க்கண்ட உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 22.07.2022 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் 2 மணிவரை மற்றும் முத்தையாபுரம் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.

நகர் வடக்கு உபகோட்டத்திற்குட்பட்ட பகுதிகள்: கிழக்கு கடற்கரை சாலைசமத்துவபுரம், தருவைகுளம் மற்றும் தருவைகுளம் உப்பள பகுதிகள் , பட்டினமருதூர் உப்பள பகுதிகள், ஹவுசிங் போர்டு சகாய மாதா பட்டினம் சவேரியார்புரம் அ.சண்முகபுரம், மதுரா கோட்ஸ் சுற்றியுள்ள பகுதிகள், சண்முகபுரம் வடக்கு, மேல சண்முகபுரம், வி.இ. ரோடு, மீனா கானா தெரு தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு, சிவந்தா குளம் ரோடு வடக்கு பகுதி, SPG கோயில் தெரு 1,2,3 மீனவர் காலனி வடக்கு பகுதி, சந்தை ரோடு, ஜார்ஜ் ரோடு-டவுன் பீடர், லெவிஞ்சிபுரம், லோகியா நகர், சிஜிஇ காலனி, சிவந்தாகுளம், கால்டுவெல் காலனி, பக்கிள் புரம், கேவிகே நகர், ஜெயராஜ் ரோடு அதை சுற்றியுள்ள பகுதிகள், 

முத்தையாபுரம் தானியங்கி மின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் வழங்கும் தூத்துக்குடி டவுன் (TTN) சார்ந்துள்ள பெரியசாமி நகர், முடுக்குகாடு, மற்றும் உப்பள பகுதி மற்றும் முள்ளக்காடு தோப்பு தெரு, வரத விநாயகர் கோவில்தெரு திருச்செந்தூர் மெயின் ரோடு, பெரியார் தெரு, ஆனந்நகர், உப்பள பகுதி, அபிராமி நகர், எச்டபிள்யூபி குடியிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், ஒட்டநத்தம் துணைமின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழங்கும் பாறைக்குட்டம், வடமலாபுரம், பாண்டியாபுரம் சண்முகபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், 

ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழங்கும் வெள்ளாரம், கச்சேரி தனவாய்புரம், குமாரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், வாகைகுளம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழங்கும் அல்லிகுளம், திருவனந்தபுரம், தெற்கு சிலுக்கன்பட்டி, கொம்புகாரநத்தம் துணைமின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழங்கும் சிங்கத்தா குறிச்சி, ஆலந்தா, காசிலிங்கா புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 63,388 விண்ணப்பதாரர்கள் வரும் 24ம் தேதி எழுதுகின்றனர்!

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on