• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 63,388 விண்ணப்பதாரர்கள் வரும் 24ம் தேதி எழுதுகின்றனர்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தொகுதி IV-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு 24.07.2022 அன்று முற்பகல் 09.30 முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. 

இத்தேர்வு இம்மாவட்டத்தில், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், எட்டையாபுரம், விளாத்திகுளம் மற்றும் கயத்தார் ஆகிய 10 வட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் கீழ்கண்ட விபரப்படி மொத்தம் 63,388 விண்ணப்பதாரர்கள் இம்மாவட்டத்தில் தேர்வு எழுத உள்ளனர்.

இத்தேர்வு பணிக்கென 41 கண்காணிப்பு குழுக்களும், கண்காணிப்பு பணிக்கென துணை ஆட்சியர் நிலையில் 10 அலுவலர்களும், 18 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு 24.07.2022 அன்று காலை 9 மணிக்குள் உரிய நேரத்தில் தேர்வுக்கூடத்தில் ஆஜராகிட வேண்டும். 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வருகைதரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், தேர்வுக்கூடத்திற்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், Smart watch, தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் பேக்கரி உரிமையாளருக்கு கத்திக்குத்து : 2 பேர் கைது

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

  • Share on