• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பேக்கரி உரிமையாளருக்கு கத்திக்குத்து : 2 பேர் கைது

  • Share on

தூத்துக்குடியில் பேக்கரி கடையை உடைத்து சேதப்படுத்தி உரிமையாளரை கத்தியால் குத்திய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் தர்மராஜ் (58). இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைைக்கு கேக் வாங்க வந்த 2பேர், கட்டப்பை கேட்டு தகராறு செய்தார்களாம். மேலும் அவர்கள் தர்மராஜை கத்தியால் குத்திவிட்டு, பேக்கரி கடையின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி விட்டார்களாம்.

இதில் காயம் அடைந்த தர்மராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வடபாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா வழக்குப் பதிந்து, தூத்துக்குடி ஜீவா காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சலைசெல்வம் (25), பூப்பாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் தேவசகாயம் (33) ஆகிய 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

  • Share on

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி மிரட்டி பைக் பறிப்பு : 2பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 63,388 விண்ணப்பதாரர்கள் வரும் 24ம் தேதி எழுதுகின்றனர்!

  • Share on