• vilasalnews@gmail.com

முத்தையாபுரத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது!

  • Share on

முத்தையாபுரத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவண உத்தரவுபடி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பிரேமானந்தன் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (21.07.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோன் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி சக்தி நகரை சேர்ந்த நாகேந்திரன் மகன் வேல்முருகன் (22) மற்றும் தூத்துக்குடி திரேஸ்புரம், சங்குகுழி காலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் நந்தகுமார் (22) என்பதும் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும்தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார் வேல்முருகன் மற்றும் நந்தகுமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட  வேல்முருகன் மீது ஏற்கனவே தென்பாகம், மத்தியபாகம், சிப்காட் மற்றும் முத்தையாபுரம் ஆகிய காவல் நிலையங்களில் 9 வழக்குகளும்,

அதேபோன்று  நந்தகுமார் மீது ஏற்கனவே தருவைகுளம் மற்றும் வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தாப்பாத்தி அகதிகள் முகாம் இ-டெண்டருக்கு எதிரான மனு தள்ளுபடி

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி மிரட்டி பைக் பறிப்பு : 2பேர் கைது!

  • Share on