2021 சட்டப்பேரவைத் தேர்தலோடு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய் விடுவார் என தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலையில் "அம்மா மினி கிளினிக் " திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைவர் என்ற அந்தஸ்துக்கு நடிகர் கமல்ஹாசன் இன்னும் தயார் ஆகவில்லை என்றும், சட்டப்பேரவைத் தேர்தலோடு கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய் விடுவார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் "மாஸ்டர்" திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் அளிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.