அகதிகள் முகாம் அமைக்கும் இ-டெண்டருக்கு எதிரான மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது.
தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுசீலா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாமிற்காக 834 வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்காக இ-டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் நிபந்தனைகளால் உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இதனால், உள்ளூர் பகுதி மக்களுக்கான வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இ-டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, 'தமிழக சட்டச பையில் தீர்மானம் நிறைவேற்றி அரசால் அறிவிக்கப்பட்டது. அரசின் நிதியில் இருந்து தான் கட்டப்படுகிறது.
ஊராட்சி ஒன்றியத்தின் நிதி செலவிடப்பட வில்லை. எப்படி டெண் டர் ஒதுக்குவது என்பதை அரசு தான் முடிவெடுக்கும். இதில், ஊராட்சி ஒன்றியத்திற்கு எந்த பங்கும் இல்லை' என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இதில் தலையிட வேண்டிய தில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.