தூத்துக்குடியில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலத்த தீக்காயம் அடைந்தார்.
தூத்துக்குடி அன்னை இந்திரா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் சோலை பெருமாள் (50). இவர் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தனியே வசித்து வருகிறார். இன்று இவரது வீட்டில் சமையல் கேஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கவனிக்காமல் அவர் பீடி பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது கேஸ் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சோலை பெருமாள் பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் தூத்துக்குடி அரசு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் விசாரணை நடத்தி வருகிறார்.