• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 25க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கினார் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

  • Share on

தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள்   மாற்றுதிறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கினார்.

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில்  தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

இதில் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இனிப்பு வழங்கி 25க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கினார்.


இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்ஸிஸ், மாவட்ட பொருளாளர் முத்து மாரியப்பன், மாவட்ட செயாலாளர்  மார்க் மகேஸ், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, நிகழ்ச்சி தொகுப்பாளர்  சாந்தி, ராஜா ஸ்டாலின், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் சார்பாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

இந்த தேர்தலோடு கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய் விடுவார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

  • Share on