• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தமிழ்நாடு தின சிறப்பு இசை நிகழ்ச்சி!

  • Share on

உலக இசை தினம் மற்றும் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு கலை பண்பாட்டு துறை சார்பில் இசைப்போட்டிகள் நடத் தப்பட்டன. இந்தபோட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மற்றும் சிறப்பு இசை நிகழ்ச்சி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நேற்று நடந்தது

விழாவுக்கு அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமசெல்வி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் ஜெகன் பெரிய சாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். 

விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:

சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நெய்தல் திருவிழா நடைபெற்றது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மங்காத வகையில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

அதுபோல் கலை பண்பாட்டுதுறை சார்பில் தவில் நாதஸ்வரம் பரதநாட்டியம் குரளோசை என பல்வேறு கலைகள் உள்ளன. இதில் 10 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இதில் பங்கேற்று இந்த கலைகளை கற்றுக்கொள்ளலாம்.

இன்பம் துன்பம் கலந்ததுதான் வாழ்க்கை அதையும் நாம் எதிர்கொண்டு வாழ பழகி கொள்ள வேண்டும். துன்பமான நேரங்களில் இசை நிகழ்ச்சிகளையும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு வந்தால் மனம் மகிழ்ச்சியடையும். இது போன்ற நிகழ்வுகள் மாநகராட்சி பகுதிகளில் எம்.ஜி.ஆர் பூங்கா, கடற்கரை பூங்கா, போன்ற மக்கள் கூடும் இடங்களில் வாரம் தோறும் நடைபெறும். அதற்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் பொதுமக்கள் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று பேசினார்.

மேலும், தமிழக அரசின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மண்வளம், தண்ணீர் நலம் பாதுகாக்கும் வகையில் மக்காதா பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் உபயோகபடுத்தாமல் துணிப்பை பயன்படுத்த வேண்டும். என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படும் வகையில் மீண்டும் மஞ்சபை அவமானம் அல்ல சுற்றுச்சுழலை காப்பவரின் அடையாளம். பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு தூத்துக்குடி மாநகராட்சி என்ற அடையாளத்துடன் மறுபுறம் ஸ்பான்சர்கள் மூலம் 5 லட்சம் துணிப்பைகள் மாநகராட்சி பகுதி முழுவதும் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதற்க்கும் ஓத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  

விழாவில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணன், கவுன்சிலர்கள் கனகராஜ், விஜயலட்சுமி, தென்னக வில்லிசை கிராமிய கலைஞர்கள் மறுமலர்ச்சி சங்கத்தை சேர்ந்த கலைசுடர்மணி ஜெயலலிதா, மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், வட்டப்பிரதிநிதி துரை, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், சிறப்பு இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் அச்சிட்ட பேப்பர்களில் வடை, பஜ்ஜி வழங்க தடை!

தூத்துக்குடியில் 22ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

  • Share on