• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் பணி நீக்கம் : தூத்துக்குடி எஸ்பி அதிரடி உத்தரவு!

  • Share on

பணியின் போது  சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவரை பணி நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர் முன்னதாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது கடந்த 10.10.2019 அன்று தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்குச் செல்லாமல் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கோவில் பகுதிக்கு காக்கி சீருடையில் சென்று, அங்கு இருந்த சிறுமி மற்றும் அவரது காதலர் ஆகிய இருவரையும் புகைப்படம் எடுத்து பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியபடுத்திவிடுவதாக மிரட்டி பணம் ரூ.5,000 கொண்டு வர அறிவுறுத்தி சிறுமியின் காதலனை அனுப்பி விட்டு தனிமையில் இருந்த அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காவலர் சசிகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணையில் மேற்படி காவலர் மீதான குற்றம் நிரூபனம் ஆனதையடுத்து ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக் கோப்பு சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல் புரிந்துள்ள காவலர் சசிகுமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

குளத்தூரில் மாட்டு வண்டி பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள் - முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் அச்சிட்ட பேப்பர்களில் வடை, பஜ்ஜி வழங்க தடை!

  • Share on