விளாத்திகுளம் அருகே குளத்தூரில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
பெரிய மாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உடன், ஒன்றிய கவுன்சிலர் மணியகாரம்பட்டி விஜயகுமார், வைப்பார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட பிரதிநிதியுமான செண்பகப்பெருமாள், மாவட்ட பிரதிநிதி பிச்சைமணி, கிளை செயலாளர் வேல் மயில், தங்க செல்வம், சுரேஷ் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாட்டு வண்டி போட்டியில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
மாட்டு வண்டி பந்தயத்தில், சீறிபாய்ந்த காளைகளை மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து ஆர்வமுடன் கண்டு களித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.