எட்டையபுரம் நகர அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டையபுரம் நகர மெயின்பஜாரில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு, எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சுப்புலட்சுமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் செல்வி, இணை செயலாளர் சாந்தி, வார்டு செயலாளர்கள் கார்ட்டன் பிரபு, ரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.