• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு - 2 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த அல்போன்ஸ் மகன் ஜெயசுந்தர் (50) என்பவர் இன்று (15.07.2022) அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லயன்ஸ் டவுன் ஜங்ஷன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஜெயசுந்தரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஜெயசுந்தர் இன்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரம் பகுதியை சேர்ந்த ஆதிமூலம் மகன் முருகன் (எ) ஓட்டப்பல் முருகன் (24) மற்றும் ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மகேந்திர குமார் (24) ஆகிய 2 பேரும் மேற்படி ஜெயசுந்தரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார்  முருகன் (எ) ஓட்டப்பல் முருகன் மற்றும் மகேந்திர குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரொக்கபணம் ரூபாய் 1,42,000, ரூபாய் 12,000 மதிப்புள்ள செல்போன் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட முருகன் (எ) ஓட்டப்பல் முருகன் மீது ஏற்கனவே தென்பாகம், ஓட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் 12 வழக்குகளும்,

மகேந்திர குமார் மீது ஏற்கனவே கழுகுமலை, ஓட்டப்பிடாரம் மற்றும் பசுவந்தனை ஆகிய காவல் நிலையங்களில் 6 வழக்குகளும் உள்ளது குறிப்பிடதக்கது.

  • Share on

குளத்தூர் அருகே காமராஜர் பிறந்த நாள் விழா - திருஉருவச்சிலைக்கு அதிமுகவினர் அபிஷேகம் செய்து மரியாதை!

காமராஜரின் 120வது பிறந்த நாள் - எட்டையபுரம் நகர அதிமுகவினர் மரியாதை!

  • Share on