• vilasalnews@gmail.com

குளத்தூர் அருகே காமராஜர் பிறந்த நாள் விழா - திருஉருவச்சிலைக்கு அதிமுகவினர் அபிஷேகம் செய்து மரியாதை!

  • Share on

தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, குளத்தூர் அருகே பனையூர் கிராமத்தில் உள்ள காமராஜரின் திருஉருவச்சிலைக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம்   செய்யப்பட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் , சிறப்பு விருந்தினராக விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கலந்து கொண்டு காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய  அதிமுக செயலாளர் பால்ராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், குளத்தூர் துணை பஞ்சாயத்து தலைவர் மாரிச்செல்வி பாலமுருகன், அதிமுக மாவட்ட பிரதிநிதி வைப்பார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செண்பகப் பெருமாள், ஒன்றிய துணைச் செயலாளர் பிச்சைமணி, குளத்தூர் வேல்மையில், சந்திரசேகர், ஒன்றிய அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜ், பனையூர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

  • Share on

குளத்தூரில் விதிமுறைகளை மீறி மணல் திருட்டு - மாவட்ட ஆட்சியருக்கு பாஜக புகார் மனு!

தூத்துக்குடியில் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு - 2 பேர் கைது!

  • Share on