தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கு கல்வி நிலையங்களில் விண்ணப்பித்து பயன்பெற சார்ந்தோர் சான்று முன்னாள் படைவீரர் அலுவலகத்தை நேரில் அணுகி பெறலாம்.
மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறை இணையதள முகவரியில் (https://esmwel.tn.gov.in) விண்ணப்பித்தும் சான்று பெற்றிடலாம். நடப்பு கல்வி ஆண்டிற்கு, இதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சான்றோர் சான்றிதழினை பயன்படுத்தக் கூடாது. மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.