விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று காமராஜர் பிறந்தநாள் விழா ஒன்றில் திமுகவை சேர்ந்த போதை ஆசாமி ஒருவரால் தாக்கப்பட்டதாக வரும் தகவல்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திமுகவைச் சேர்ந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் இன்று விளாத்திகுளம் மார்க்கண்டேயன் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட வேப்பலோடை அருகே உள்ள வே. பாண்டியபுரம் கிராமத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்து, காரில் இருந்து இறங்கி போது, சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனை அங்கிருந்த ஒருவர் சட்டையை பிடித்து அடிக்க முற்பட்டதாகவும், அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அங்கிருந்த திமுகவினர் மற்றும் எம்எல்ஏ உடன் வந்தவர்கள், அந்தநபரை பிடித்து தடுத்து, பதிலுக்கு அந்த நபரை கூட்டமாக சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த நபர் திமுக உறுப்பினர் அதிஷ்டராஜ் (52)என்பதும், அவர் அப்போது மதுபோதையில் இருந்ததாகவும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் எந்த நிகழ்ச்சிகளுக்கும் தன்னை அழைக்கவில்லை என்றும், நிகழ்ச்சியின் போது எனது பெயரை கூறவில்லை என்ற கோபத்தில் எம்எல்ஏவிடம் அவ்வாறு நடந்து கொண்டதாக விசாரணையில் அதிஷ்டராஜ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வே. பாண்டியபுரம் கிராமத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கிளம்பிச்சென்றார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக தருவைகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.