• vilasalnews@gmail.com

டீசல் திருடி கையுங்களவுமாக பிடிபட்டவர் கைது - 21 லிட்டர் டீசல் மீட்பு

  • Share on

தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டீசல் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசூர் பகுதியில் தண்ணீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மேற்படி நிறுவனத்தில் ஒரு டிராக்டரில் ஒரு பேரலில் 21 லிட்டர் டீசல் வைக்கப்பட்டுள்ளது.

அந்த 21 லிட்டர் டீசலை நேற்று (14.07.2022) மதுரை மாவட்டம் அய்யாப்பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அழகுராஜா (32) என்பவர் திருடி கையுங்களவுமாக பிடிபட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்படி நிறுவனத்தின் மேலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பென்சன் வழக்கு பதிவு செய்து  அழகுராஜாவை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 2,000 மதிப்பிலான 21 லிட்டர் டீசலையும் பறிமுதல் செய்தார்.

  • Share on

தூத்துக்குடியில் மீன் வியாபாரியை தாக்கி ரூ.1½ லட்சம் கொள்ளை : வழிப்பறியில் ஈடுபட்டு மர்ம நபர்கள் கைவரிசை!

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டாரா? பரபரக்கும் விளாத்திகுளம் தொகுதி

  • Share on