• vilasalnews@gmail.com

பசுவந்தனை அருகே கோவில்களில் வெண்கல மணிகளை திருடியவர் கைது

  • Share on

பசுவந்தனை துர்க்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் கணேசன் (40) இவர் தெற்கு செவல்பட்டி கண்மாய்கரை அருகில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.

அதே போன்று பசுந்தனை to ஓட்டபிடாரம் ரோடு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பசுவந்தனை அருந்ததியர் காலனியைச் சேர்ந்த அருணகிரி மகன் ஒண்டிவீரன் (85) என்பவர் கோவில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் மேற்படி கோவில் பூசாரிகள் தங்களது கோயில்களை நேற்று (12.07.2022) மாலை நடைசாத்திவிட்டு இன்று (13.07.2022) காலை வந்து பார்க்கும்போது கணேசன் பணியாற்றி வரும் கோவிலில் ரூபாய் 5,000 மதிப்புடைய சிறிய வெண்கல மணி ஒன்றும், அதே போன்று ஒண்டிவீரன் பணியாற்றி வரும் கோவிலில் ரூபாய் 30,000/- மதிப்புடைய வெண்கல மணி ஒன்றும் திருடு போனது மேற்படி சம்பந்தப்பட்ட கோயில் பூசாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட கோயில் பூசாரிகள் இன்று அளித்த புகாரின் பேரில் பசுவந்தனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் சீதாராம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜீவன்மரகதம் உட்பட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பெரியதாழை சேவியர் காலனியைச் சேர்ந்த நசுரேன் மகன் ஜெனிபர் (32) என்பவர் மேற்படி இரண்டு கோயில்களிலும் வெண்கல மணிகளை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக மேற்படி போலீசார் ஜெனிபர் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு வெண்கல மணிகளையும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட TN72BF 7678 Tata Zip எனும் மினி சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு - முன்னாள் எம்எல்ஏ மோகன் நேரில் வாழ்த்து

  • Share on