தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஜூலை 14ந் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஊரக மின்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணி நாளை ஜூலை 14ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் புதுக்கோட்டை அருகே உள்ள பவானிநகர், சிவன்கோவில்தெரு, போடம்மாள்புரம், இமயம், கூட்டாம்புளி மற்றும் குலையன்ரிசல், வல்லநாடு அருகே உள்ள கலியாவூர், சின்னகலியாவூர், காலாங்கரை, அம்பேத்கார்நகர், உழக்குடி, குளத்தூர் அருகே உள்ள கொல்லம்பரும்பு, வீரபாண்டியாபுரம், மற்றும் அய்யர்பட்டி, சாயர்புரம் அருகே உள்ள கட்டாலன்குளம், சுப்ரமணியபுரம், சண்முகபுரம், கொத்தனேரிவிளை மற்றும் முள்ளன்விளை, பழையகாயல் அருகே உள்ள கணேசன்நகர், பரிபூரணநகர், தாமஸ்நகர், அன்னைதெரசாநகர், முக்காணி மற்றும் பழையகாயல் பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று கூறி உள்ளார்.
இதே போன்று தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தூத்துக்குடி நகர்ப்புற மின்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, விபத்து ஏற்படாமல் இருக்க வேண்டி உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் நாளை ஜூலை 14ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
இதனால் தூத்துக்குடி சிவந்தா குளம் ரோடு, இந்திரா நகர், பாத்திமா நகர், தாமோதர் நகர், ஜார்ஜ் ரோடு, வண்ணார் 1, 2, 3,-வது தெருக்கள், பெருமாள் தெரு, சண்முகபுரம் பிராப்பர், சந்தியாகப்பர் கோவில் மற்றும் ரட்சண்யபுரம் சுற்றியுள்ள பகுதிகள், தெற்கு பீச் ரோடு, மாதா தோட்டம், ரோச் காலனி 1, 2, 3-வது தெருக்கள், தெற்கு எம்பரர் தெரு, மினி சகாயபுரம், முத்தம்மாள் காலனி, தனசேகரன் நகர், ஆதிபராசக்தி நகர், எட்டயபுரம் ஹவுசிங் போர்டு, ஆரோக்கியபுரம், அரசடி பனையூர். அ.குமாரபுரம். ஏ.எம். பட்டி, மேல மருதூர், புளிய மரத்து அரசடி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகள், தூத்துக்குடி மணிநகர், அண்னா நகர் 1 முதல் 10-வது தெரு, டூவிபுரம் 1 முதல் 10-வது தெரு, கே.வி.கே.நகர், போல் பேட்டை மேற்கு, பிரையன்ட்நகர் 1 முதல் 12-வதுதெரு, முனியசாமி நகர், மன்னர் ஐயர் காலனி, கதிர்வேல்நகர், ராஜீவ்நகர், நிகிலேசன் நகர், பால்பாண்டிநகர், அன்னை தெரசா நகர், முத்துகிருஷ்ணன் நகர், கோக்கூர், தபால் தந்தி காலனி,
முத்தையாபரம் அருகே உள்ள ஜே.எஸ்.நகர், அம்பேத்கார் நகர், குமாரசாமி நகர், சுந்தர்நகர், பொன்னாண்டி நகர், வீரநாயக்கன்தட்டு, காலாங்கரை, அத்திமரப்பட்டி, பொட்டல்காடு, மதகிரி, ஒட்டநத்தம் அருகே உள்ள சண்முகபுரம், பாண்டியாபுரம், பாறைக்குட்டம், வடமலாபுரம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி, இந்திராநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், கொம்புக்காரநத்தம் அருகே உள்ள செட்டியூரணி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டாப்பாறை, உமரிகோட்டை, எஸ். கைலாசபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என்று கூறி உள்ளார்.