அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு, எட்டையபுரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க.,வின் இடைக்கால பொது செயலாளராக பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.மேலும், இந்த கூட்டத்தில் 4 மாதத்திற்குள் பொது செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது. தேர்தல் நடத்துவதற்காக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், அ.தி.மு.க., இடைக்கால பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ வழிகாட்டுதல் படி, எட்டையபுரம் நகர அதிமுக சார்பில், நகர செயலாளர் ராஜ குமார் தலைமையில் எட்டையபுரத்தில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில், எட்டையபுரம் நகர அதிமுக அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்ட்டன் பிரபு, சீனா என்ற முத்துகிருஷ்ணன், ராஜா, முனியசாமி, சாந்தி, செல்வி , ரத்னா, மேலமைப்பு பிரதிநிதி சுப்புலட்சுமி, மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.