ஸ்டேட் பேங்க் காலனி மெயின் ரோடு பகுதியில் எலக்ட்ரானிக் கடையில் ஷட்டரை உடைத்து மின் வயர்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி கோமதி பாய் காலனியைச் சேர்ந்த முத்து மகன் லிங்கராஜ் (38) என்பவர் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி மெயின் ரோடு பகுதியில் சொந்தமாக எலக்ட்ரானிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று (12.07.2022) காலை கடையை திறந்து பார்க்கும் போது கடையிலிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மின் வயர்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து லிங்கராஜ் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி எஸ். எஸ். பிள்ளை தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அஜித் குமார் (21) என்பவர் மேற்படி லிங்கராஜின் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த மின் வயர்களை திருடியது தெரிய வந்தது.
இதனையடுத்து வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜ் மேற்படி அஜித்குமாரை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 37,600 மதிப்புள்ள மின் வயர்களையும் பறிமுதல் செய்தார்.