• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது!

  • Share on

தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மில்லர்பரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி தனது இருசக்கர வாகனத்தை கடந்த 11.7.2022 அன்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது நிறுத்தி வைத்திருந்த அவரது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நாகராஜின் மனைவி நேற்று (12.07.2022) அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி தோப்புத் தெருவை சேர்ந்த மகபு பாஷா மகன் முகம்மது இப்ராஹிம் பஷீர் (23) என்பவர் மேற்படி நாகராஜ் மனைவியின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து முகம்மது இப்ராஹிம் பஷீரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 50,000 மதிப்பிலான இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.

  • Share on

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை வெளியேற்ற அனுமதி கோரி மனு தாக்கல்

தூத்துக்குடியில் ஷட்டரை உடைத்து எலக்ட்ரானிக் கடையில் மின் வயர்களை திருடியவர் கைது

  • Share on