திருச்செந்தூர் ராணி மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த முத்து மகன் சரவணகுமார் (43) என்பவரை இன்று (12.07.2022) காலை குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரம் பகுதியில் உள்ள ஓரு டீக்கடை அருகே மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த குரும்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்து ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து, சம்மந்தப்பட்டவர்களை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் சந்தேகப்படும்படியான 4 நபர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.